என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதியோர் இல்லம்"
- போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உடனே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் அவரது தாய் அந்த முதியோர் இல்லத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் தனது தாயையும் சுட்டு கொன்றுள்ளார். தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும்போது, முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு கொடூரமான செயல். இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
- குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது
- குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவருமான ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
திருவட்டார் :
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மாத்தார் புனித மரியன்னை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவரு மான ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெபர்சன், ஷிஜு, லிஜீஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஆல்பின் பினோ மற்றும் மாவட்ட துணை செயலாளர் ராஜ், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஆற்றூர் பேரூராட்சி துணை தலை வர் தங்கவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் லெனின், நிர்வாகிகள் விஜயகுமார், ராஜகுமார், அப்ரின், லிபின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்
நாகர்கோவில் :
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேசமணிநகர் சிநேகம் முதியோர் இல்லத்திற்கு தொழிலதிபர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் சார்பில் கழிவறையுடன் கூடிய நவீன கட்டில் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், நவீன கட்டிலை முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் லதா கலைவாணனிடம் வழங்கினார்.
பின்னர் மேயர் மகேஷ் பேசியதாவது:-
பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்றோர்கள் தங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு எவ்வளவு தியாகங்களை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். உங்கள் பெற்றோர்களை நீங்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கும்போது, உங்கள் பிள்ளைகள் நாளை உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டார்கள் என என்ன நிச்சயம். கலைஞர் முதியோர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அத்தகைய தலைவரின் நூற்றாண்டு விழாவில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
- எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் கூறி உள்ளது.
இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.
சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.
அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
- முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
- பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
மேலும் சிலர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களை ரெயில் நிலைய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களில் சுற்றித்திரிந்த முதியோர்களை பிடித்தனர்.
விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள் (வயது 65)திருவண்ணாமலை சேர்ந்த குப்புசாமி (70) ராஜேந்திரன்(58)ஆரணி மீனா (50) பெரம்பலூர் மணிகண்டன் (40) காஞ்சிபுரம் ரேகா (50) செங்கல்பட்டு பொன்னம்மாள் (70)சரஸ்வதி (45) ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் முதியவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என தெரிய வந்தது. வேலூர் முதியோர் இல்லத்தில் அவர்களை சேர்த்தனர்.
- ஜெயலலிதா பிறந்தநாள் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பின்னர் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அவனியாபுரம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் ஓ.பி.எஸ். அணி மாநில இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் ஏற்பாட்டில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்துகொண்டு முதியோர் இல்லத்திற்கு தேவையான கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
பின்னர் முதியோர் களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.டி. மனோகரன், மாணவரணி மாவட்ட செயலாளர் பிரபாகர், பகுதி செயலாளர்கள் ஆட்டோ கருப்பையா, கண்ணன் மகாலிங்கம், பொதுகுழு உறுப்பினர் பவுன்ராஜ், வட்ட செயலாளர்கள் நாச்சியப்பன், கொம்பையா, முத்து, ராஜகோபால், இன்பம்,சாத்தன உடையார், பத்ரி முருகன், திருப்பதி, கமலகண்ணன், கிரி, புல்லட் ராமமூர்த்தி, பெருமாள், பூங்கொடி, முத்து மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
தூத்துக்குடி:
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதனை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில்100 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் அறுசுவையுடன் கூடிய மதிய உணவை வழங்கி பிறந்தநாள் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வ ராஜ்,விண்மீன் டிரஸ்ட் பாலா, பகுதி செயலா ளர்கள் சுரேஷ், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜான்சிராணி, விஜயலட்சுமி துரை வானி மார்ஷல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்தரன், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார், அருண், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது.
- உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் முதியோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில், ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி தானம் வழங்கினர்.
தங்களது இந்த செயலால் முதியோர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை அறிந்துகொண்டனர். மேலும், உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் திரட்டிய நிதி 600 முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லங்களின் பிரதி நிதி ரேச்சல் சாம்சனிடம் வழங்கப்பட்டது. நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் 2007ம் ஆண்டு முதல் தொடங்கி
நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் நிதி வழங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
- கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
- அரசு தொடக்கப்பள்ளியிலும் இனிப்பு வழங்கப்பட்டது.
நாகர்கோவில்:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18-வது ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் இந்தியன்சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர்ராஜன், வக்கீல் பொன் செல்வராஜன், பகுதி பொறுப்பாளர்கள் கோணம் ராஜன், நாஞ்சில் வெங்கட், ராஜாமணி, ராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவானந்த், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வைகுண்டராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் நாகராஜாகோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. எள்ளுவிளை அரசு தொடக்கப்பள்ளியிலும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆசாரிபள்ளம் ஜிஷா முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசுவாமி, புத்தேரி ஊராட்சி செயலாளர்அய்யப்பன், மேலசங்கரன்குழி ஊராட்சி செயலாளர் செந்தில், எள்ளுவிளை ஊராட்சி செயலாளர் விக்னேஷ், மேலசங்கரன்குழி செல்லபெருமாள், கணபதி, மாவட்ட மகளிரணி ஜெயா, சாந்தி, அபூர்வகனி, லட்சுமி, செல்வி, மாவட்ட மாணவரணி அனீஷ், வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுதன், மணி, கணபதிபுரம் ரஜினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
தமிழக அரசின் விதிமுறைகளின் படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறும், அவ்வாறு பதிவு இல்லாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்:35,36 தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் வினித் தெரிவித்துள்ளார்.
- முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார்.
- கோவை டவுன் ஹாலில் ஆய்வின் போது பேசினார்
கோவை, ஜூன்.5-
கோவை மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றவர் பிரதாப். இவர் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் ஹால் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது நடை பாதையில் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்த்தார். பின்னர் அவரிடம் சென்று நலம் விசாரித்தார். அவரிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன் விருப்பம் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் டவுன் ஹால் மற்றும் ராஜா வீதி ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த படுகிறதா என்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் மக்களிடம் முதல் -அமைச்சர் மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகி றார்கள். பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்